அரசு பஸ் மோதி ஒருவர் பலி
அசு பஸ் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கழனிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 48), தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று செந்தில் மற்றும் ஏரிபுதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். தாங்கல் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் செந்தில், சிலம்பரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த செந்திலுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.