கரும்பு டிராக்டர் மோதி ஒருவர் பலி
கச்சிராயப்பாளையம் அருகே கரும்பு டிராக்டர் மோதி ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி 5-வது நகரை சேர்ந்தவர் பாஷா மகன் சாகுல் ஷமீத் (வயது 46). இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கச்சிராயப்பாளையத்தை அடுத்த அக்கராயப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். தோப்பூர் அருகே வந்தபோது கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் சாகுல்ஷமீத் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சாகுல் ஷமீத் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story