வாகனம் மோதி ஒருவர் பலி
வாகனம் மோதி ஒருவர் பலி
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமத்தை அடுத்த சிறுக்களந்தை பஸ் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் திடீரென அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு போராடினார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து நெகமம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story