திருவாரூரில், 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை


திருவாரூரில், 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2023 12:30 AM IST (Updated: 13 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி திருவாரூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

திருவாரூர்

திருவாரூர்;

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி திருவாரூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

பூக்கள் விலை உயர்வு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அதன் படி இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.திருவாரூர் கடைவீதியில் சுமார் 60 பூக்கடைகள் உள்ளன. இந்த கடைவீதிக்கு ஓசூர், சேலம், மைசூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் தான் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அதன்படி தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

மேலும் விலை உயரும்

குறிப்பாக மல்லிகை, முல்லை, செவ்வந்தி பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை நேற்று ரூ.ஆயிரத்துக்கும், ரூ.ஆயிரத்துக்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. திருவாரூர் கடைவீதியில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை (கிலோ)வருமாறு:- அரளி ரூ.400, பன்னீர் ரோஸ் ரூ.200, ஆப்பிள் ரோஸ் ரூ.250, சம்பங்கி ரூ.150, செண்டிப்பூ ரூ.70, அரும்பு காக்கட்டான் ரூ.1,200, பூத்த காக்கட்டான் ரூ.1,600, கனகாம்பரம் பூ வரத்து இல்லை.இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பூக்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து மட்டும் சற்று குறைந்து காணப்பட்டது. இதர பூக்கள் அதிக அளவில் வரத்து இருந்தது. பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் விலையும் அதிகமாக காணப்பட்டது. பண்டிகை நெருங்க, நெருங்க பூக்கள் விலை மேலும் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story