காதல் கணவன் ஒருவன்...கள்ளக்காதலர்கள் மூவர்


காதல் கணவன் ஒருவன்...கள்ளக்காதலர்கள் மூவர்
x
தினத்தந்தி 20 Oct 2023 2:00 AM IST (Updated: 20 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றோடு ஒன்றி...ஒன்றித்து வாழ்வதுதான்... உண்மை காதல்...

கோயம்புத்தூர்

ஒன்றோடு ஒன்றி...ஒன்றித்து வாழ்வதுதான்...

உண்மை காதல்...

ஆனால்...ஒன்றைவிட்டு ஒன்றாய்.. ஒவ்வொன்றாய்...

கண்டதே காதல்...கொண்டதே லாபம் என்று...

கண்டபடி....தாவிக்கொண்டிருந்தால்...

அது தவறான காதல்..தகாத காதல்....

கண்டால் சகிக்க முடியாத காதல்தானே...?

ஆம்....கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது இளம்பெண்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது...

உண்மையான இந்த காதல்...கல்யாணம்வரை சென்றது..

இதனால்...இருவருக்குள்ளும் இதயம் மகிழ்ந்து இல்லறத்தில் இன்பம் கண்டனர்...

ஆசைகளுடன் கலந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து

12 ஆண்டுகள் ஆனது...

ஆனால் குடும்பத்தை குதுகலமாக்கும் குழந்தை செல்வங்கள் இல்லாமலே இருந்தது...

இருப்பினும்...ஒருவர் மடியில்...இருவரடி என்பது போல்...இருவருமே குழந்தைகளாக மாறிவிட்டனர்...

அந்த அளவுக்கு அளவில்லாத பாசத்துடன் இருவரும் உறவை பரிமாறிக்காண்டு வாழ்ந்தனர்.

இந்த நிலையில் தான்...என்ன ஆனது என்னவளுக்கு...? என்று அவன் சொல்வது போல் அவனது மனதுக்குள் பேரிடியாக மாறிவிட்டாள் அவள்.

இந்த சம்பவம் பற்றி பார்க்கலாம்:-

காதல் கணவர் ஒருவர்தான்...காதல் மனைவி ஒருத்திதான் என்று இருந்த வேளையில்...அவள்...அவள்தான்... அந்த 29 வயது இளம் மனைவிதான்...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பழகினாள்.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த அவளது கணவர் கண்டித்தான்...

ஆனால் அவள் கண்டுகொள்ளவில்லை...

முடிவில்...அவள் அந்த கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தாள்.

ஒருசில மாதங்களில் உணர்ந்தாள்...தெளிந்தாள்...மீண்டும் தனது கணவருடன் வந்து விட்டாள்.

தவறை உணர்ந்து வந்து விட்டாள்...தன்னுடையவள் ஆகியிற்றே என்று அவளை ஆசையாய் ஏற்றுக்கொண்டான் கணவன்.

இந்த நிலையில் மீண்டும் வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றாள்.

காதல் கணவனால் கண் தூங்க முடியவில்லை...காலத்தின் கோலமா...?

என்று கண்கலங்கி நின்றான்...

அதன் பின்னர் அவரையும் பிரிந்து மீண்டும் கணவருடன் வந்து சேர்ந்து விட்டாள். அதனையும் மன்னித்து ஏற்றது மகான் போன்ற அவளது கணவரின் இதயம்.

அதனைத் தொடர்ந்து அவள்....கூடலூரை சேர்ந்த உறவினரான ஒருவருடன் ஒட்டி உறவாடினாள்.

அந்த உறவு கள்ளக்காதல் ஆனது... அடிக்கடி சந்தித்து உல்லாச ஊஞ்சல் கட்டி உற்சாகம் அடைந்தனர்.

ஒரு நாள்...அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்... இருவருமே எஸ்கேப் ஆகி விட்டனர்.

இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு...மீண்டும் இடிமின்னல்...

இதயத்தைதாக்கியது.

இல்லத்தரசியாய் இருக்க வேண்டியவள்....

யாருடனோ...பரதேசியாய் பறந்து விட்டாளே என்று... பதை பதைத்து நின்றான்.

இருப்பினும்...மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

இது குறித்து கணவனான அவன் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தான். இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் ஒரே ஆண்டில் 3-வது கள்ளக்காதலுடன் பயணித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல் கணவன் ஒருவன்...கள்ளக்காதலர்கள் மூவர் என்று ஓடினாள்...ஓடினாள் குடும்பத்தை மறந்து...ஓழுக்கத்தை மறந்து ஓடியே போய் விட்டாள் என்று ஊரார் சொல்வதும் ஒலிக்கத்தான் செய்கிறது.


Next Story