மேலும் ஒருவர் கைது
மேலும் ஒருவர் கைது
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி இரவு முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேரில் 13 பேர் கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி கைது செய்யப்பட்டனர். 20-ந்தேதி மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை கலைஞர் நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது43) என்பவரை மயிலாடுதுறை போலீசார் நேற்று கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story