நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில்  மேலும் ஒருவர் கைது
x

பள்ளிபாளையம் அருகே நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பாதரை பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 38). நிதி நிறுவன அதிபர். இவரை கடந்த மாதம் அவரது அலுவலகத்தில் வேலை செய்த குணசேகரன் உள்பட பலர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் தனிப்படையினர் திருச்செங்கோடு மலையனூர் பகுதியை சேர்ந்த முனியன் மகன் பிரகாஷ் (30) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என தனிப்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story