இடப்பிரச்சினை தகராறில் மேலும் ஒருவர் கைது


இடப்பிரச்சினை தகராறில் மேலும் ஒருவர் கைது
x

நெல்லையில் இடப்பிரச்சினை தகராறில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி (வயது 47) என்பவரை இடப்பிரச்சினை தகராறு காரணமாக முத்துராமலிங்கம் (55) மற்றும் மந்திரமூர்த்தி (33) ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி, இரும்பு கம்பியை காட்டி மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் முத்துராமலிங்கத்தையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story