ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதானபாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் பறிமுதல்


ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதானபாதிரியாரின் மேலும்                    ஒரு செல்போன் பறிமுதல்
x

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வார காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வார காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

பாதிரியார்

கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர், இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிபாறையைச் சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். அந்த புகாரில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தார்.

அதன்படி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

2 வழக்குகள்

இதற்கிடையே வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதிரியாரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி பாளையங்கோட்டை சிறையில் இருந்த பாதிரியாரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவரை மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின்மீதும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்தனர். இதன்மூலம் பாதிரியார் மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் ஒரு செல்போன்

இந்த வழக்கு தொடர்பாக பாதிரியாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சைபர் கிரைம் போலீசார் போலீஸ் காவல் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித் தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாதிரியார் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களைத்தான் மீண்டும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவரது மேலும் ஒரு செல்போனை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செல்போனைத்தான் போலீசார் தேடி வந்ததாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் புதிதாக தடயங்கள் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்து வருகிறார்கள்.

குற்றப்பத்திரிக்கை

இன்னும் ஒரு வார காலத்தில் பாதிரியார் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தெரிவித்தார். இதற்கிடையே பாதிரியாரை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story