2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு


2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x

தென்னிலை அருகே 2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

கரூர்

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கடந்த 10-ந் தேதி 2 வேன்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 8 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர், கண்ணம்பாளையத்தை சேர்ந்த கமல் இருதயராஜ் (வயது 50) சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story