மான்களை வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது


மான்களை வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே மான்களை வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ளார்-தளவாய்புரத்திற்கு மேற்கே கடந்த மாதம் 17-ந் தேதி சிவகிரி வனத்துறை ரேஞ்சர் மவுனிகா தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே உள்ளாரைச்சேர்ந்த முருகன் என்பவரின் தோட்டத்தில் மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக 5 பேரையும், மேலும் இதுதொடர்பாக 27-ந் தேதி ராஜபாளையம் தாலுகா சுந்தர ராஜபுரத்தைச் சேர்ந்த 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் இதுதொடர்பாக நேற்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சதீஷ்குமார் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story