கனியாமூர் கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது


கனியாமூர் கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

கனியாமூர் கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது திடீரென கலவரம் வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. மேலும் பள்ளி வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை வைத்து மேலும் பலரை அடையாளம் கண்டு அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி சின்னசேலம் அடுத்த வி.மாமாந்தூர் தெற்கு தெருவை சேர்ந்த லட்சாதிபதி (வயது 34) என்பவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story