திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது


திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள வெங்கடாசலபுரம் செல்லும் ரோட்டில் உள்ள தனியார் காற்றாலையில் காவலாளியாக ரமேஷ் (வயது 28) என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் காற்றாலை சுற்றி உள்ள இடத்தை பார்வையிட்ட போது 33 கிலோ எடையுள்ள காப்பர் ஒயர் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ்நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஏற்கனவே அய்யனார்ஊத்து பகுதியைச் சேர்ந்த கணபதி (23) என்பவரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி (22) என்பவரை நேற்று செய்தார்.


Next Story