விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் சிறையில் அடைப்பு


விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் சிறையில் அடைப்பு
x

விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 60). விவசாயியான இவர் பிரச்சினைக்குரிய இடத்தில் வீடு கட்டுவதாக கூறி கடந்த 6-ந்தேதி அவருடைய அண்ணனான பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்த மாரிக்கண்ணுவின் மகன்கள் பிரகாஷ் (40), இளவரசன் (36) மற்றும் ராஜேந்திரன் மகன் சந்திரசேகரன் (26) ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, அன்பழகனை கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டி கிணற்றில் தள்ளினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தின்போது 3 பேருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறி, அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். கொலை சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் இளவரசனையும், சந்திரசேகரனையும் கடந்த 8-ந்தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று முடிந்த பிரகாசை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story