ரூ.1½ கோடி கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
நெல்லை அருகே நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளையடித்து சென்ற வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளையடித்து சென்ற வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.1½ கோடி கொள்ளை
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). நகைக்கடை அதிபரான இவர் கடந்த 30-ந் தேதி நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலத்துக்கு தனது காரில் புறப்பட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் அவரை நெல்லையை அடுத்த மூன்றடைப்பு அருகே வழிமறித்து காரை உடைத்து அவர் வைத்திருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த செபின் ராஜூ (26), எட்வின் தாமஸ் (27) ஆகியோரை தனிப்படை போலீசார் மூனாறு பகுதியில் கைது செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த எட்வின் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் திருச்சூருக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த எட்வினை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை பிடிக்க கேரளாவில் தனிப்படை போலீசார் முகாமிட்டு உள்ளனர்.