வாகனம் மோதி ஒருவர் சாவு
மேலூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
மேலூர்,
மேலூரில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழி சாலையில் நரசிங்கம்பட்டி உள்ளது. இங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் அதிகாலை 4 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் இறந்தார். இறந்தவர் யார்? என தெரியவில்லை. இதுகுறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire