திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்துவதற்காக 38 மூட்டையில் வைத்திருந்த 1020 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதனை திருவள்ளூர் தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.


Next Story