முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவருக்கு ஓராண்டு சிறை
முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
லால்குடி:
லால்குடி அருகே நகர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். செந்தில்குமார், பூவாளூர் மாதானம் வடக்கு தெருவை சேர்ந்த குழந்தைவேல் மகன் சிவக்குமாரிடம், கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் ரூ.1 லட்சத்துக்கு செந்தில்குமார் செக் கொடுத்துள்ளார். சிவக்குமார் அந்த செக்கை வங்கியில் செலுத்தியபோது, செந்தில்குமாரின் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. இது குறித்து சிவக்குமார் கடந்த 2017-ம் ஆண்டு லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடுத்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் செந்தில்குமார் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் தீர்ப்பு கூறினார். அதில் செந்தில்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், செந்தில்குமாரை போலீசார் பிடித்து நேற்று கோர்ட்டில் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.