போலீஸ் ஏட்டுக்கு ஒரு ஆண்டு ஜெயில்


போலீஸ் ஏட்டுக்கு ஒரு ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 30 Aug 2023 1:15 AM IST (Updated: 30 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர், ஆக.30-

கரூர் மாவட்டம் புகளூர் அருகே செம்படாபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 52). நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி சாந்தி (47), இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி சாலையோரமாக நின்றனர். அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி சாந்தி மீது மோதியது. இதில் சாந்தி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த போலீஸ் ஏட்டு சுப்பிரமணி (50) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு பரமத்திவேலூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன், ஏட்டு சுப்பிரமணிக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். ஏட்டு சுப்பிரமணி வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story