பதிவுத்துறை முன்னாள் டி.ஐ.ஜி.க்கு ஒரு ஆண்டு சிறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பதிவுத் துறை முன்னாள் டி.ஐ.ஜி.க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பதிவுத் துறை முன்னாள் டி.ஐ.ஜி.க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பதிவுத்துறை முன்னாள் டி.ஐ.ஜி.
கோவையில் பதிவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் வி.மணி (வயது 74). இவர் தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை ரூ.22 லட்சத்து 83 ஆயிரத்து 583 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஒரு ஆண்டு சிறை
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோா்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகன ரம்யா பதிவுத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. வி.மணிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து விதித்து நீதிபதி எஸ்.மோகன ரம்யா உத்தரவிட்டார்.