ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை உயர் தொழில் நுட்பத்துடன் மூட வேண்டும்

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை உயர் தொழில் நுட்பத்துடன் மூட வேண்டும்
x

மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை உயர் தொழில்நுட்பத்துடன் மூட வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்

மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றை உயர் தொழில்நுட்பத்துடன் மூட வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எண்ணெய் கிணறு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேந்தமங்கலம் வருவாய் கிராமம், பெரியகுடி கிராமத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) சார்பில் துரப்பண எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் கடந்த 2012-ம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது.

இதன்காரணமாக இந்த துரப்பண கிணறு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் 2013-ம் ஆண்டு அப்போதுள்ள கருவிகள் மூலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

உயர் தொழில் நுட்பத்துடன் மூட வேண்டும்

இந்த கிணற்றை தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப கருவியுடன் சரியான முறையில் மூட மாவட்ட நிர்வாகத்திடம், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தினரால் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

அதிக அழுத்தத்தால் உள்ள துரப்பண கிணற்றினை பொதுமக்களுக்கு பாதிப்பு மற்றும் பேரழிவு ஏற்படாமல் உயர் தொழில் நுட்பத்துடன் மூட வேண்டும். மேலும் இக்கிணற்றில் வேறு எவ்வித பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story