தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை


தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 8 Aug 2023 7:30 PM GMT (Updated: 8 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் சாகுபடி குறைந்தது. இதனால் அதன் விலை ரூ.150 வரை உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.10 விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் விலை குறைந்ததால் அதன் விற்பனை வழக்கத்தை விட சற்று அதிகரித்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர்.


Next Story