சின்ன வெங்காயம் விலை உயர்வு


சின்ன வெங்காயம் விலை உயர்வு
x
தினத்தந்தி 8 Oct 2022 1:15 AM IST (Updated: 8 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு, வடக்கு ரதவீதி, பழனி ரோடு பைபாஸ் பகுதிகளில் தரகுமண்டிகள் செயல்பட்டு வருகிறது. இந்த தரகுமண்டிகளுக்கு குஜிலியம்பாறை, கோவிலூர், துறையூர் மற்றும் தேனி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் சின்னவெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி மார்க்கெட் நாட்களில் விற்பனைக்கு வரும் சின்னவெங்காயத்தின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். கடந்த மாதம் சின்னவெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.45 வரையில் விற்பனை ஆனது. இந்நிலையில் அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.60 வரையில் நேற்று விற்பனை ஆனது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னவெங்காயத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. இந்நிலையில் அதன் வரத்து குறைந்து சுமார் 15 டன் நேற்று வரத்தானது. மேலும் சின்னவெங்காயத்தின் தேவை அதிகரித்து உள்ளதால் அதன் விலை உயர்ந்து உள்ளது என்றார்.


அதேபோல் மத்திய பிரதேசம், கர்நாடகாவில் இருந்து மார்க்கெட்டுக்கு சுமார் 560 டன் பல்லாரி நேற்று வரத்தானது. இதையொட்டி கிலோ ரூ.20 முதல் ரூ.28 வரையில் நேற்று விற்பனை ஆனது.



Next Story