பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது


பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது
x

2022-ம் ஆண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது

சென்னை,

தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சில பல்கலைகளை தவிர, மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், தனியார் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் துவங்கியுள்ளன. அரசின் கவுன்சிலிங்கையும் தாமதமின்றி துவக்க வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளநிலையில் , பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகள் நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், 2022-ம் ஆண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. http://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அக்டோபர் 6ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story