ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம்

கீழக்கரை

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சைபர் கிரைம் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு தற்போது நடைபெற்று வரும் ஆன்லைன் மோசடி குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்களில் உங்களின் நண்பர்களாக அறிமுகமாகி பொதுமக்களை சுலபமாக ஏமாற்றி வருகின்றனர். மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற இணையதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை மாணவிகள் மற்றும் பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு செல்போனில் குறைந்த வட்டியில் பணம் தருவதாக வரக்கூடிய குறுந்தகவல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியில் சிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் அளித்தார். மேலும் இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் நம்பர் 1930 அல்லது WWW.cybercrime.gov.in என்ற இணையதளத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் இர்பான் முன்னிலை வகித்தார். செந்தில்குமாரி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story