ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா: நாளை சட்டசபையில் தாக்கல்


ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா: நாளை சட்டசபையில் தாக்கல்
x

ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது.

இக்குழு 27.6.2022 அன்று தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச் சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ஆம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதன்படி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை நாளை (19-10-2022) சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னதாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியாகியிருந்தது.


Next Story