வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பொது கலந்தாய்வு
வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பொது கலந்தாய்வு
வடவள்ளி
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல், பட்டயப்படிப்புகளுக்கான ஆன்லைன் பொதுகலந்தாய்வு நடந்தது.
மாணவர் சேர்க்கை
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 14 இளம் அறிவியல் பட்டப்படிப்புகள், 3 பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் ஜூன் வரை நடந்தது. சுமார் 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியான 36 ஆயிரத்து 612 பேரின் தரவரிசை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதை யடுத்து, மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 887 மாணவர்கள் விண்ணப்பித்துஇருந்தனர். இந்த மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பொதுப்பிரிவு கலந்தாய்வு நடந்தது.
சரிபார்ப்பு
இந்த கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடம் கிடைத்த 7.5 சதவீத மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 19-ந் தேதி மதியம் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த 56 மாணவர்களிடம் பெறப்பட்ட தகவல்களில் சந்தேகம் எழுந்தது. குறிப்பாக, அவர்கள் அரசு பள்ளியில்தான் படித்தார்களா? என்ற சந்தேகம் வந்த தாக தெரிகிறது. இதையடுத்து, மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அழைப்பு
மேலும், அரசு ஒதுக்கீட்டில்பொதுப்பிரிவில் உள்ள 4,555 இடங்களுக்கான பொது கவுன்சிலிங் ஆன் லைனில் நடந்து வருகிறது. தரவரிசை பட்டியலின் அடிப்படையில், 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரி வுகளை தேர்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு சீட் ஒதுக் கீடு செய்யப்படும். பின்னர், அவர்களுக்கு கடிதம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.