பட்டா மாறுதல் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்க இணையவழி சேவை


பட்டா மாறுதல் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்க இணையவழி சேவை
x

பட்டா மாறுதல் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்க இணையவழி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அரியலூர்

பட்டா மாறுதல் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை தவிர்க்கும் வண்ணம் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட இணையத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை) அறிமுகம் செய்துள்ளது. இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen/, பட்டா மாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://eservices.tn.gov.in/eservicesnew/log/Appstatus.html/, பட்டாமாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா (புலப்படம்), அ-பதிவேடு ஆகியவற்றை எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவையின் கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ள https://eservices.tn.gov.in/ இவ்விணையத்தை பயன்படுத்தி அரியலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் பயன் பெற்றிட கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story