ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று


ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து சோதனைச்சாவடிகளில் ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

போக்குவரத்து சோதனைச்சாவடிகளில் ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்காலிக அனுமதி சான்று

மாநில எல்லைகளில் தமிழக அரசு சார்பில் போக்குவரத்து சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு தற்காலிக அனுமதி சான்று அளிக்கப்படுகிறது. மேலும் வரி செலுத்தாத மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. தற்காலிக அனுமதி சான்றுக்கு அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வழங்கப்பட்டு வந்தது.

மேலும் இதற்கான தொகை நேரடியாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சோதனைச்சாவடிகளில் நேரடி பண பட்டுவாடா இல்லாத முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தற்காலிக அனுமதி சான்று ஆன்லைனில் பெறும் வசதி செயல்படுத்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி அருகே கோபாலபுரம், வளந்தாயமரம் போக்குவரத்து சோதனை சாவடிகளில் இந்த திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் ஆன்லைன் மூலம் தற்காலிக அனுமதி சான்று வழங்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், சீதாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஆன்லைனில் பணம் செலுத்துதல்

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு தற்காலிக அனுமதி சான்று வழங்கப்படுகிறது.தற்போது சோதனைச்சாவடிகளில் நேரடி பணம் பட்டுவாடா இல்லாத நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தற்காலிக அனுமதி சான்று ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். வாகன ஓட்டிகள் ஆன்லைனில் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story