சனிக்கிழமைகளில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்
மயிலாடுதுறையில், இன்று முதல் சனிக்கிழமைகளில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில், இன்று முதல் சனிக்கிழமைகளில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஓட்டுனர் உரிமம்
சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் அறிவுரையின் பேரிலும், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின்படியும், பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
சிறப்பு சேவை
குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலக வேலை நேரங்களில் சேவை பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த சிறப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி புதிய ஓட்டுனர் உரிமத் தேர்வு மற்றும் பழைய ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் சேவைகளைப் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.