ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்


ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்
x

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழப்பம் விளைவித்தால் நடவடிக்கை

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின திருநாள் அமுத பெருவிழாவையொட்டி மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை) அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அவமதிப்பு

ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் 9444178000 என்ற எனது செல்போன் எண்ணிலும், ஊராட்சிகள் உதவி இயக்குநர் (7402607518) செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் தேசிய கொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story