சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பென்ஷன் குறைந்தபட்சம் 8 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய தலைவர் ருக்மணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் செல்வராணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சுரேஷ்குமார், கோபி, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story