உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு - கமல்ஹாசன்


உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும்  பேரிழப்பு - கமல்ஹாசன்
x

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள்-முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி (வயது 79) இன்று காலமானார்.

சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள்-முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி (வயது 79) இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவிற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உம்மன் சாண்டி மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story