ஊட்டி, குன்னூர் பகுதிகளில்இன்று மின்சார வினியோகம் நிறுத்தம்
ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இன்று மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
ஊட்டி: நீலகிரி மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஊட்டி மற்றும் ஜெகதளா துணை மின் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஊட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஊட்டி நகர், பிங்கர் போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டிமந்து, இத்தலார் மற்றும் எம்.பாலாடா ஆகிய பகுதிகளிலும் ஜெகதளா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுபட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி மற்றும் மவுண்ட் பிளசண்ட் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.