ஊட்டி மலர் கண்காட்சியை 2 நாட்களில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்


ஊட்டி மலர் கண்காட்சியை 2 நாட்களில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
x

ஊட்டி மலர் கண்காட்சியை 2 நாட்களில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

நீலகிரி

ஊட்டி, மே.22-

நீலகிரி மாவட்டம் ஊட்டி முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

இ்ங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கோடை விழா நடத்தப்படவில்லை. இதற்கிடையில் கொரோனா பரவல் குறைந்ததால் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனை காண எராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் குவிந்தனர்.

இந்த நிலையில் நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை காண வந்தனர். அவர்கள் மலர் அலங்காரங்கள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அவ்வபோது மழை பெய்தது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடி மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். கடந்த 2 நாட்களில் மலர் கண்காட்சியை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்ததாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மலர் கண்காட்சி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.


Next Story