ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி


ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஏ டிவிஷன் பிரிவில் இடம்பெற்றுள்ள ஊட்டி புளூமவுண்டன் வாரியர்ஸ் அணி, ஊட்டி ஸ்பார்டன் அணிக்கு இடையேயான லீக் போட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்றது. தலா 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி புளூமவுண்டன் வாரியர்ஸ் அணி 21 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த அணி வீரர் சரவணன் 34 ரன்கள், வபுனிதன் 26 ரன்கள் எடுத்தனர். ஊட்டி ஸ்பார்டன் அணியின் பந்து வீச்சாளர் நந்தகுமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய ஊட்டி ஸ்பார்டன் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் ரதீஷ் 51 ரன்கள், கருணாகரன் 42 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் ஊட்டி ஸ்பார்டன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 More update

Next Story