பெண் வக்கீல்களுக்கு தனி அறை திறப்பு
ஊட்டி கோர்ட்டில் பெண் வக்கீல்களுக்கு தனி அறை திறக்கப்பட்டது.
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி காக்காதோப்பு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அங்கு பெண் வக்கீல்களுக்கு என தனி அறைகள் இல்லாததால், அவர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் முயற்சியால், தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வக்கீல்களுக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் கலந்துகொண்டு பெண் வக்கீல்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை திறந்து வைத்தார். இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன், நீதிபதிகள் லிங்கம், ஸ்ரீதர், நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சகீலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story