புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா


புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:20+05:30)

தி.சூரக்குடி ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

சாக்கோட்டை ஒன்றியம் காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ஏ.ஆர்.முருகப்பன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். சாக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் கே.ஆர்.ஆனந்த் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆறு.முத்துலெட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பெரியசாமி, ஜோதி, விஜயகுமாரி, செல்வி, சுரேஷ், செல்வம், எம்.செல்வி, அந்தோணிசவரிசாந்தி, ஊராட்சி செயலர் பவதாரணி, உதவியாளர் பாண்டி மற்றும் அவைத்தலைவர் தி.மு.க சூரக்குடி பழனியப்பன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணிமேகலை, சொர்ணம், பாலு, கருப்பையா, நெற்புகப்பட்டி பழனியப்பன், பாண்டியன் நகர் ரவி, அரசு ஒப்பந்தக்காரர் திருவேலன்குடி பொறியாளர் எம்.ஆர்.கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story