அரசு பள்ளியில் கலையரங்க திறப்பு விழா


அரசு பள்ளியில் கலையரங்க திறப்பு விழா
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கீழச்சீவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கீழச்சீவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நடந்தது. பள்ளி பொருளாளர் அம்மையப்பன் வரவேற்றார். பள்ளி கல்விக்கழக தலைவர் வெள்ளையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யா, அழகாபுரி மணிவாசகம் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் கலையரங்கத்தை திறந்து வைத்தனர். பள்ளி செயலாளர் வெங்கடாசலம், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிங்காரம் வாசுகி, லதா நாராயணன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் அழகப்பன், அருணாச்சலம், முத்தையா, திருஞானசம்பந்தம் மற்றும் விளையாட்டு வீரர் பழனியப்பன், முன்னாள் பள்ளி செயலர்கள் ஆதியப்பன், கருப்பையா, முன்னாள் உடற்கல்வி இயக்குனர் முருகப்ப ராஜா, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன், கே.ஆர்.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளியம்மை நன்றி கூறினார். சிங்காரம் வாசுகி ரூ.20 லட்சம் மதிப்பில் சொந்த செலவில் இந்த கலையரங்கத்தை கட்டி கொடுத்துள்ளார்.


Next Story