பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா

பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா
x

விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

விருதுநகர்

விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

திறப்பு விழா

விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி அளவில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் பேராசிரியர் சீனிவாசன், பொன் பாலகணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story