தொடக்க பள்ளி பராமரிப்பு பணி தொடக்க விழா


தொடக்க பள்ளி பராமரிப்பு பணி தொடக்க விழா
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க பள்ளி பராமரிப்பு பணி தொடக்க விழா நடந்தது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியை அடுத்த கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் கொடூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து இந்த பள்ளிக்கட்டிடத்தை பராமரிப்பு செய்ய கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள், தலைமையாசிரியர் ஆகியோர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ.8.89 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பராமரிப்பு பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். அரசு வக்கீல் பாலசுப்பிரணியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கொடூர் ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.


Next Story