தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்


தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 27 April 2023 6:45 PM GMT (Updated: 27 April 2023 6:47 PM GMT)

தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அதனை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சர்பத், மோர், குடிநீர் போன்றவைகள் தொடர்ந்து கோடைகாலம் முடியும் வரை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கணேசன், பொதுக்குழு உறுப்பினரும் சிங்கம்புணரி பேரூராட்சி தலைவருமான அம்பல முத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர அவை தலைவர் சிவக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராசு, பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர செயலாளர் கதிர்வேல், துணை ஒன்றிய செயலாளர்கள் சிவபுரி சேகர், துணை நகர செயலாளர் அலாவுதீன், பிரதிநிதிகள் குடோன்மணி, தருண் மெடிக்கல் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், தனுஷ்கோடி, தொழில்நுட்ப பிரிவு சையது, சிங்கம்புணரி ஜமாத் தலைவர் ராஜா முகமது, சிங்கம்புணரி ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், திரைப்பட துறை சென்னை முருகேசன், ஞானி செந்தில், கவுன்சிலர்கள் மணி சேகரன், ஜெயக்குமார், செந்தில் கிருஷ்ணன், மற்றும் உப்பு செட்டியார் தெரு அழகுராஜா, முன்னாள் கவுன்சிலர் பிரகலாதன், சரவணன் பொன்னையா, பரிஞ்சி சரவணன், அமுதன், முரசொலி கார்த்திக், தொண்டரணி துரைசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story