உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்க விழா
உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்க விழா நடந்தது
சிவகங்கை
சிவகங்கை நகராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்க விழா நகர சபை தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பாண்டீஸ்வரி முன்னிலை வைத்தார் சேகரிப்பு மையத்தை தொடங்கி வைத்து நகர சபை தலைவர் துரை ஆனந்த் கூறியதாவது:- இந்த மையத்தில் வருகிற ஜூன் 5-ந் தேதி வரை பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய துணிகள் செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாட புத்தகங்கள் போன்றவற்றை இங்கு ஒப்படைக்கலாம். இதனை தேவை உள்ளவர்கள் இங்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார் நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் சேது நாச்சியார், வீரகாளை, அயூப் கான், மதியழகன், வண்ணம்மாள், சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், தூய்மை பாரதத்திட்ட மேற்பார்வையாளர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சுகாதார உறுதிமொழி எடுக்கப்பட்டது.