கொள்முதல் நிலையம் திறப்பு
கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது
இளையான்குடி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளையான்குடி வட்டார மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிலையம் உருவாக்கப்பட்டு, சூராணம் கிராம சேவை மைய கட்டிடத்தில் மிளகாய் மற்றும் நெல், சிறு தானியங்கள் கொள்முதல் செய்யும் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் வானதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
மகளிர் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நியாயமான விலைக்கு இடைத்தரகுகள் இன்றி நேரடியாக இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கிடைக்கும் லாபம் தனி நபர்களுக்கு செல்லாமல் நிறுவனத்திற்கு கிடைக்கிறது என்பதனை விளக்கி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட இயக்குனர்கள் விக்டர் பெர்னாட்ஸ், குபேந்திரன் மற்றும் வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முருகேஸ்வரி, விமலா ஆகியோர் செய்திருந்தனர்.