ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு


ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
x

இருக்கன்துறையில் ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் இருக்கன்துறை பஞ்சாயத்து இருக்கன்துறை கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவர் இந்திரா முருகேசன் தலைமை தாங்கினார்.

ஞானதிரவியம் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். வள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் சங்கனேரி தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story