சமுதாய நலக்கூடத்தில் புதிய அறை திறப்பு


சமுதாய நலக்கூடத்தில் புதிய அறை திறப்பு
x

பாளையஞ்செட்டிகுளம் சமுதாய நலக்கூடத்தில் புதிய அறை திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையஞ்செட்டிகுளத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் பகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதி (2019-2020) ரூ.13.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடத்தில் புதிய உணவு உண்ணும் அறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தி.மு.க. மகளிர் தொண்டரணி மாநில துணைச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் புதிய அறையை திறந்து வைத்தார்.

விழாவில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், கட்சி நிர்வாகி ஆவின் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காமராஜர் திருவுருவப்படத்துக்கு இரா.ஆவுடையப்பன், விஜிலா சத்யானந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story