வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் பகுதிநேர கால்நடை மருத்துவ மையம் திறப்பு

வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் பகுதிநேர கால்நடை மருத்துவ மையம் திறப்பு
x

வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் பகுதிநேர கால்நடை மருத்துவ மையம் திறக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி

வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் பகுதிநேர கால்நடை மருத்துவ மையம் திறக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் பகுதிநேர கால்நடை மருத்துவ மையம் திறக்கப்பட்டது.

வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தணிகைமலை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதேவி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்தார்.

இதில் கால்நடை ஆய்வாளர் சுதர்சன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தயாளன், தேவகி, ஜெயம்மாள் உள்பட பலா கலந்துகொண்டனர்.

இந்த கால்நடை மருத்துவ மையம் வாரந்தோறும் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story