டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு எடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை திறப்பு


டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு எடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை திறப்பு
x
தினத்தந்தி 1 July 2023 12:30 AM IST (Updated: 1 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு எடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை திறப்பு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் கிளை-3 ல் கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு ஓய்வு அறை உள்ளது. இந்த அறை புதுப்பிக்கப்பட்டு குளிர்சாதன வசதி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

விழாவில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், உதவி மேலாளர் ஜோதிமணிகண்டன், துணை மேலாளர்கள் ராம்குமார், நாகேந்திரன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.90 லட்சம் வருவாய் கிடைக்கிறது. இதில் ரூ.75 லட்சம் டீசலுக்கு செலவாகிறது. எனவே வருவாயை மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு சேவை மனபான்மையுடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பஸ்சில் இலவசமாக பயணம் செய்து கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தளம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதேபோன்று கிளை-1, கிளை-2 பிரிவுகளிலும் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story