சி மார்ட் மீன், காய்கறி அங்காடி திறப்பு
ராணிப்பேட்டை அருகே சி மார்ட் மீன், காய்கறி அங்காடி திறப்பு விழா நடந்தது.
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் வேலூர் மெயின் ரோட்டில் கடல் மீன்கள், காய்கறிகள், பழங்கள் அடங்கிய 'சி மார்ட்' என்ற பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. கிறிஸ்டிதீஸ்மான் தலைமை தாங்கினார். பவுலஸ் முன்னிலை வகித்தார். சாகின்பால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை காவா ஜும்பா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி ஏ.அப்சாலி மரைக்காயர் ரிப்பன் வெட்டி அங்காடியை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
சிறிய, நடுத்தர, பெரிய மீன் வகைகள், நண்டு, இறால், கணவாய் மீன் என விதவிதமான கடல் மீன்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் தாங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். அதேபோல் காய்கறிகள், பழங்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதனையும் வாடிக்கையாளர்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர்.
இதுகுறித்து அங்காடி நிர்வாகி கூறியதாவது:-
புதிதாக திறக்கப்பட்ட இந்த அங்காடியில் அனைத்து விதமான கடல் மீன்களும் புத்தம் புதிதாக கிடைக்கும். தினமும் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை கடல் மீன் மற்றும் காய்கறிகள் கிடைக்கும். அதேபோல் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மீன் வறுவல் கிடைக்கும். மீன்கள், காய்கறிகள், பழங்கள் அனைத்தும் மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக வீடு தேடி டெலிவரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.