சிமெண்டு சாலை திறப்பு

கீழக்கடையத்தில் சிமெண்டு சாலை திறக்கப்பட்டது.
கடையம்:
கடையம் யூனியன் கீழக்கடையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.ஏ.ஒ. ஆபீஸ் தெரு சாலை கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்டது. சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய வாறுகாலுடன் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். .துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் முன்னிலை வகித்தார். கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கடையம் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன், முகமது உசேன், அழகுதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஜெயம் நன்றி கூறினார்.